தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 724 பேருக்கு கரோனா பாதிப்பு

6th Dec 2021 12:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 724 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகும்.

குறிப்பாக சென்னை, கோவையில் நோய்த் தொற்று பரவல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் இதுவரை 5.47 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 30,516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 131 பேருக்கும், கோவையில் 124 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, மேலும் 743 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 85,946-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,041 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,529-ஆக அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT