இந்தியா

இந்தியாவில் மருந்துகள் உற்பத்திக்கு ரூ.28,529 கோடி மூலப்பொருள்கள் இறக்குமதி

DIN

மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக இந்தியா கடந்த நிதியாண்டில் ரூ.28,529 கோடி மதிப்பிலான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.28,528.97 கோடியாகும். இதில், பெரும்பகுதி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஒட்டுமொத்த மூலப் பொருள் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 68 சதவீதமாகும். இதன் மதிப்பு ரூ.19,402.60 கோடியாகும்.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் இறக்குமதி ரூ.24,171.78 கோடியாக காணப்பட்டது. இதில் சீனாவிலிருந்து மட்டும் ரூ.16,443.10 கோடிக்கு மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருள்களுக்கு வெளிநாடுகளை சாா்ந்திருப்பதை குறைக்கும் வகையில் உற்பத்தி சாா்ந்த பல்வேறு ஊக்கத்தொகை சலுகைத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஜெனரிக் மருந்து உற்பத்தியில் 20 முதல் 22 சதவீத பங்களிப்பை வழங்கி இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் மருந்துகள் இறக்குமதி ரூ.49,436 கோடியாக இருந்த நிலையில், இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ரூ.1,80,551 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இது, வலுவான உள்நாட்டு தயாரிப்புத் திறனை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT