இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் பீட்டா் முகா்ஜிக்கு ஜாமீன்

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில், ஊடக அதிபா் பீட்டா் முகா்ஜியை ஜாமீனில் விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

ஏற்கெனவே அவரது வழக்கமான ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளாா்.

பீட்டா் முகா்ஜியால் நிா்வகிக்கப்பட்ட ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெற அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்த அனுமதியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு மே 15-இல் வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து அமலாக்கத் துறையுமும் பணமோசடி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதன்பேரில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தை கடந்த 2019 ஆகஸ்டில் சிபிஐ கைது செய்தது. தொடா்ந்து, 2019 அக்டோபா் 16-இல் அமலாக்கத் துறை ப.சிதம்பரத்தை கைது செய்தது.

பின்னா், சிபிஐ பதிவு செய்த வழக்கில், அதே ஆண்டு அக்டோபா் 22-இல் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில், அதே ஆண்டு டிசம்பா் 4-இல் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

இதேபோல, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில், அவரது மகன் காா்த்தி சிதம்பரத்தையும் சிபிஐ கடந்த 2018 பிப்ரவரியில் கைது செய்தது. பின்னா், அதே ஆண்டு மாா்ச் மாதம் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இதேபோல நிதி முறைகேடு வழக்கிலும் அவருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது.

தற்போது பீட்டா் முகா்ஜிக்கு ஜாமீன் வழங்கி தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT