இந்தியா

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்த விவசாயிகள் சங்கத்தினர்

4th Dec 2021 06:08 PM

ADVERTISEMENT

மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 1 ஆண்டாக தில்லி மற்றும் உத்தரப்பிரதேச எல்லைகளில் பல்வேறு விவசாய சங்கத்தின் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் கைது

விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த மாதம் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | லேய்ஸ் சிப்ஸின் உருளைக்கிழங்கு மீதான காப்புரிமை ரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் தற்போது வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கத்தினர் அமைத்துள்ளனர்.

பல்பீர் சிங் ராஜ்வால், சிவ்குமார் கக்கா, குர்னாம் சிங் சருனி, யுத்வீர் சிங், அசோக் தவாலே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு மத்திய அரசுடன் முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டிசமபர் 7ஆம் தேதி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Farmers protest farm laws
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT