இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்

4th Dec 2021 07:51 PM

ADVERTISEMENT


தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இந்தியாவிலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. நாட்டில் ஏற்கெனவே 3 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்கஇந்தியாவில் மூன்றாவது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கல்யான்-டோம்ப்விலி திரும்பிய 33 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கண்டறியப்படும் முதல் ஒமைக்ரான் பாதிப்பு இது. இதற்கு முன்பு பெங்களூருவில் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Tags : omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT