இந்தியா

லேய்ஸ் சிப்ஸின் உருளைக்கிழங்கு மீதான காப்புரிமை ரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

4th Dec 2021 05:56 PM

ADVERTISEMENT

அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வந்த பெப்சிகோ நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த உருளைக்கிழங்கிற்கான காப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

லேய்ஸ் நிறுவனமானது சிப்ஸ் தயாரிப்பதற்காக பிரத்யேகமான உருளைக்கிழங்கை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து பயிரிட்டு பயன்படுத்தி வருகிறது. தாங்கள் காப்புரிமை பெற்ற இந்த உருளைக்கிழங்கு வகைகளை தங்களைத் தவிர வேறு யாரும் பயிரிட, பயன்படுத்த தடை உள்ளதாகவும் பெப்சிகோ நிறுவனம் தெரிவித்து வந்தது.

இதையும் படிக்க | ரோசய்யா மறைவிற்குப் பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு குஜராத் மாநில விவசாயிகள் நால்வர் மீது பிரபல நிறுவனமான பெப்சிகோ தாங்கள் காப்புரிமை பெற்ற தங்கள் உருளைக்கிழங்கை பயிரிட்டதாகக் கூறி ரு.1 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிவு செய்தது. இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக 2019ஆம் ஆண்டே விவசாயிகளின் மீதான நஷ்ட ஈடு கோரிய வழக்கை திரும்பப் பெற்றது பெப்சிகோ நிறுவனம்.

இதையும் படிக்க | வெளிநாடு செல்லாத மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி?

இந்நிலையில் கவிதா எனும் விவசாயிகள் செயற்பாட்டாளர் தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பிடம் இதுகுறித்து முறையிட்டார். மேலும் பெப்சிகோ நிறுவனம் உருளைக்கிழங்கு விதைகளுக்கு பெற்றுள்ள காப்புரிமையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரினார். இந்த முறையீட்டின் மீதான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கின் மீது பெப்சிகோ நிறுவனம் பெற்ற காப்புரிமை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Pepsico Potato Lays
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT