இந்தியா

இந்திய ராணுவத்தை பலப்படுத்தும் ஏகே 203 துப்பாக்கிகள்; உ.பி.யில் அமையும் பிரம்மாண்ட தொழிற்சாலை

4th Dec 2021 05:32 PM

ADVERTISEMENT

அதிநவீன ஏகே 203 துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் பிரம்மாண்ட ஆலையை அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அமேதியின் கோர்வா என்ற பகுதியில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட துப்பாக்கி ஆலை மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சிறு மற்றும் குறு தொழில்கள் பெருகும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

அதிநவீன ஏகே 203 துப்பாக்கியை ரஷ்யாதான் உருவாக்கியுள்ளது. ஏகே 47 துப்பாக்கிகளைப் போலவே இந்தத் துப்பாக்கிகளும் ராணுவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதே அளவுள்ள துப்பாக்கிகளில் 5.56 மிமீ அளவுள்ள குண்டுகள் தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஏகே 203 துப்பாக்கியில் 7.62 மிமீ அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெகு தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்க முடியும். அதாவது, மூன்று கால்பந்து மைதானங்களை தாண்டி சென்று இலக்கை தாக்கும் வகையில் இந்த துப்பாக்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக, இன்சாஸ் ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் அதிக அளவில் பயன்படுத்தியுள்ளது. 1980களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த துப்பாக்கிகளின் தொழில்நுட்பம் பழமையான ஒன்றாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்சாஸ் துப்பாக்கிகளுக்குப் பதிலாக ஏகே 203 துப்பாக்கிகளைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கஒமைக்ரான் கரோனாவின் தீவிரத்தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்த பிரம்மாண்ட ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டவுடன் படிப்படியாக அதிநவீனத் துப்பாக்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது. மிகவும் குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த துப்பாக்கி மூலம் சுமார் 300 மீட்டர் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகச் சுட முடியும். 

மேலும், அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் கூடுதலாக லென்ஸ் உள்ளிட்ட உபகரணங்களைக் கூட இதில் இணைத்துக் கொள்ள முடியும்

அடுத்தாண்டு தொடக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த துப்பாக்கி தொழிற்சாலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Tags : ak 203 rifles
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT