இந்தியா

டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: மத்திய இணையமைச்சர்

3rd Dec 2021 10:20 PM

ADVERTISEMENT

டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், நாட்டில் டெங்கு குறித்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு (21.11.2021 வரை) மொத்தம் 1,64,103 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,05,243 ஆக இருந்தது. 

இதையும் படிக்க- கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து

இறப்பு விகிதம் 2008-ல் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இது மேலும் குறைந்து 2018-ல் 0.2 சதவீதமாகவும், 2019-ல் 0.1 சதவீதமாகவும் இருந்தது. இதன் பிறகு இதே நிலையில் நீடிக்கிறது. இதனால் நாட்டில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூற இயலாது. 

ADVERTISEMENT

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Dengue case
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT