இந்தியா

‘சாவர்க்கரைப் பற்றி பேச சிவசேனைக்கு உரிமையில்லை’: தேவேந்திர பட்னாவிஸ்

3rd Dec 2021 09:22 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிராவில் அதிகாரத்திற்காக கூட்டணி வைத்துள்ள சிவசேனைக்கு சாவர்க்கரைப் பற்றி பேச உரிமை இல்லை என்று பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார்.

இதையும் படிக்க | இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது: வைகோ

அப்போது பேசிய அவர், இந்து மதத்தை காப்பாற்ற நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்றும், அதிகாரத்திற்காக கூட்டணி மாறியுள்ள சிவசேனை போன்ற கட்சிகள் அத்தகைய முயற்சியில் ஒருபோதும் அங்கம் வகிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ராகுல் காந்தியுடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு

மேலும், “சாவர்க்கருக்கு பாரத ரத்னா கோரிய சிவசேனை தற்போது அவரை திட்டி அவமதிக்கும் கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. சாவர்க்கரை பற்றி பேச சிவசேனைக்கு எந்தத் தகுதியும் இல்லை” என தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.

Tags : Shiv sena Devendra Fadnavis Savarkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT