இந்தியா

காற்று மாசு: ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

3rd Dec 2021 04:58 PM

ADVERTISEMENT

காற்று மாசுபாடு காரணமாக ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து காற்று மாசு காரணமாக குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தலைநகா் தில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் மூடப்படுவதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடல்!

Tags : காற்று மாசு air pollution ஹரியாணா Haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT