குப்பைகளிலிருந்து உபயோகமானவற்றை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அந்த வகையில், பசுமை ஹைட்ரஜனை கொண்டு பேருந்து, டிரக்குகள், கார்களை இயக்க திட்டமிட்டருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற நிதி உள்ளடக்கம் குறித்த ஆறாவது தேசிய மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி, "நகரங்களில் சாக்கடை நீர் மற்றும் திடக்கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை கொண்டு பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்களை இயக்கும் திட்டம் என்னிடம் உள்ளது.
குப்பையிலிருந்து உபயோகமானவற்றை உருவாக்க முயற்சிக்கிறேன். ஃபரிதாபாத்தில் உள்ள எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் பைலட் ப்ராஜெக்ட் காரை நான் வாங்கினேன். மக்களை நம்ப வைப்பதற்காக அதில் நான் பயணம் செய்வேன்" என்றார்.
இதையும் படிக்க | பிரான்ஸிலும் 'ஒமைக்ரான்' முதல் பாதிப்பு உறுதியானது!