இந்தியா

ஒமைக்ரான் கரோனாவின் தீவிரத்தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

3rd Dec 2021 03:42 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இருவர் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஒமைக்ரான் வகையின் குணாதிசயங்களைக் கருத்தில் கொண்டால், இது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.

தடுப்பூசியின் வேகம் மற்றும் டெல்டா வகைக்கு பிறகு பெறப்பட்ட இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு காரணமாக நோயின் தீவிரம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து ஒமைக்ரான் அதிகளவில் பதிவாகி வருகின்றன. தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யாது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தடுப்பூசி பாதுகாப்பு என்பது ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவும் உள்ளது.

ADVERTISEMENT

எனவே, தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை கொண்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதும் முக்கியம். 

இதையும் படிக்க பிரான்ஸிலும் 'ஒமைக்ரான்' முதல் பாதிப்பு உறுதியானது!

கரோனா சோதனைகள் வைரஸில் உள்ள 'புரத கூர்முனை' (எஸ்), 'என்வலப்டு' (இ) மற்றும் 'நியூக்ளியோகேப்சிட்' (என்) போன்ற குறிப்பிட்ட மரபணுக்களைக் கண்டறிந்து இருப்பை உறுதிப்படுத்துகிறது. ஒமைக்ரான வகையில், புரத கூர்முனை மரபணு பெரிதும் மாற்றமடைந்தது. எனவே, சில முதற்கட்ட முடிவுகள் எஸ் மரபணு இல்லாததைக் குறிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். 

இந்த அம்சத்தின் மூலம் புதிய வகை கரோனாவை கண்டுபிடிக்கலாம். ஒமைக்ரானை உறுதிப்படுத்தலுக்கு, மரபணு வரிசைமுறை சோதனை தேவைப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Tags : omicron Health Ministry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT