இந்தியா

வெளிநாடுகளிலிருந்து மும்பை வந்த 9 பேருக்கு கரோனா

3rd Dec 2021 10:43 AM

ADVERTISEMENT

பல்வேறு நாடுகளிலிருந்து மும்பை வந்த 9 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. இந்தியாவில் முதல்முறையாக நேற்று கர்நாடகத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க | பிரிட்டனிலிருந்து சென்னை வந்த சிறுமிக்கு கரோனா

தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வரும் நிலையில் மும்பை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 10 முதல் டிசம்பர் 2 வரை வெளிநாடுகளிலிருந்து மும்பை வந்த 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளார்.

மேலும், அவர்கள் அனைவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT