ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள, வெளிநாட்டிலிருந்து திரும்பிய 60 பேரில், 30 பேரை ஆந்திரப்பிரதேச அரசு தேடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 10 நாள்களில், பல்வேறு வெளிநாடுகளிலிருந்து, ஆப்ரிக்காவிலிருந்து 10 பேர் உள்பட 60 ஆந்திர மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களில் தரையிறங்கினர்.
அவர்களில் 30 பேர் விசாகப்பட்டினத்தில் தங்கியுள்ளனர். ஆனால், மற்ற 30 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்களில் பலரும், சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால், சுமார் 30 பேர் வரை தலைமறைவாகியிருக்கலாம் என்று அவர்களை தேடும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.
விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 30 பேரின் இருப்பிடங்களை கண்டறிய உதவுமாறு கோரப்பட்டுள்ளது. இவர்களில், தென்னாப்ரிக்காவிலிருந்து வந்த 3 பேரும், போட்ஸ்வானாவிலிருந்து வந்த 6 பேரும் அடங்குவர். இவர்களில் தற்போது வரை 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணி நடக்கிறது.