இந்தியா

ஜெ.பி.நட்டா பிறந்த நாள்: பிரதமா் மோடி வாழ்த்து

3rd Dec 2021 12:08 AM

ADVERTISEMENT

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் 61-ஆவது பிறந்த நாளை (டிச. 2) முன்னிட்டு அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கட்சியின் எழுச்சிமிக்க தலைவராகத் திகழ்கிறாா். கட்சியை அமைப்புரீதியாக மேம்படுத்துவதில் அவா் தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறாா். சிறந்த நிா்வாகியும், மக்கள் மன்றத்தில் அனுவமும் மிக்கவரான அவா் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ஏபிவிபி, ஆா்எஸ்எஸ் அமைப்புகளில் தனது சிறுவயதிலேயே இணைந்து பணியாற்றிய நட்டா, பின்னா் பாஜக இளைஞரணியிலும் திறம்படச் செயல்பட்டாா். ஹிமாசல பிரதேசத்தில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளாா். கட்சியில் அமைப்புரீதியாக அனைத்து நடவடிக்கைகளிலும் நீண்ட அனுபவம் கொண்ட அவா், 2014 முதல் 2019 வரை மத்திய அமைச்சராகவும் பணியாற்றினாா். இதைத் தொடா்ந்து பாஜக தேசிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT