இந்தியா

‘ஜவாத்’ புயல்: 20 ரயில்கள் ரத்து

3rd Dec 2021 05:20 AM

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘ஜவாத்’ புயல் காரணமாக, சென்னை சென்ட்ரல்-ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படவுள்ளன. ஹாட்டியா-பெங்களூரு கண்டோன்மென்ட் வாராந்திர விரைவு ரயில் வரும் சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர, பெங்களூரு கண்டோன்மென்ட்-குவாஹாட்டி வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் (12509) வியாழக்கிழமை (டிச.2) ரத்து செய்யப்பட்டது.

புவனேசுவரம்-ராமேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரயில் (20896), புருலியா-விழுப்புரம் சந்திப்பு வாரம் இருமுறை அதிவிரைவுரயில் (22605), ஹவுரா-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் அதிவிரைவு ரயில் (12841), சந்திரகாச்சி-சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (22807), ஹௌரா-சென்னை சென்ட்ரல் அதிவிரைவு மெயில் (12839), சென்னை சென்ட்ரல்-ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் (12842), சென்னை சென்ட்ரல்-புவனேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரயில்(12829), சென்னை சென்ட்ரல்-ஹௌரா அதிவிரைவு மெயில் (12840), திருச்சிராப்பள்ளி-ஹௌரா வாரம் இருமுறை அதிவிரைவு ரயில்(12664) உள்பட 18 விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படவுள்ளன.

ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாட்டியா-பெங்களூரு கண்டோன்மென்ட் வாராந்திர விரைவு ரயில் (18637) வரும் சனிக்கிழமை ரத்து செய்யப்படவுள்ளது. இதுதவிர, பெங்களூரு கண்டோன்மென்ட்-குவாஹாட்டி வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில்(12509) வியாழக்கிழமை(டிச.2) ரத்து செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT