இந்தியா

அணை பாதுகாப்பு மசோதா 2019 சொல்வது என்ன?

2nd Dec 2021 02:35 PM

ADVERTISEMENT

வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் விதமாக செயல்பட்டதாகக் கூறி, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், முதல் நாளில் இருந்தே நாடாளுமன்றத்தில் அமளி நீடித்துவந்தது. இந்நிலையில், மாநிலங்களையில் அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமளி காரணமாக மாநிலங்களவையில் இரண்டு நாட்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறவில்லை.

இந்த மசோதாவுக்கு தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நாடாளுமன்றத்தின் அதிமுக அவைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், "அணை பாதுகாப்பு மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்த மசோதாவுக்கு தனது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தார். இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்றார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், அணை பாதுகாப்பு மசோதா 2019ஐ மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவையின் பொதுச் செயலாளருக்கு திமுக எம்பி திருச்சி சிவா நோட்டீஸ் அனுப்பினார். அதில், அணை உடைப்பு தொடர்பான பேரிடர்களைத் தடுப்பதற்கு அதை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் பராமரிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்கடேராடூனில் ரூ.18,000 கோடி திட்டங்கள்: டிச.4-இல் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் அமைந்துள்ளன, ஆனால், அவை தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமானவை. தமிழக அரசால் இயக்கப்படுகின்றன. பராமரிக்கப்படுகின்றன. இந்த மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில், 4 அணைகள் குறித்த தகவலை கேரளாவிடம் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. 

மேலும், அணை பாதுகாப்புக்கான தேசியக் குழுவை அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. அணை பாதுகாப்பு தரநிலைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் பரிந்துரைகளையும் அந்த குழு வழங்கும். எனவே, அரசியல் சாசனம் உறுதி செய்யும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இந்த மசோதா எதிரானது தமிழக எம்பிக்கள் வாதம் முன்வைக்கின்றனர்.

Tags : dam safety bill
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT