இந்தியா

கட்சிக்கு தலைமை வகிப்பது ஒருவருக்கு கொடுக்கப்பட்ட தனிப்பட்ட உரிமை அல்ல: ராகுல் காந்தியை விமரிசித்த பிரசாந்த் கிஷோர் 

2nd Dec 2021 01:31 PM

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளில், 90 சதவிகித தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அதற்கு தலைமை விகிப்பது ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தனிப்பட்ட உரிமை அல்ல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. இருப்பினும், சில விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே மாற்று கருத்து நிலவியதாகவும், இதன் காரணமாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதனிடையே, மும்பை சென்றிருந்த மம்தா, காங்கிரஸ் குறித்து விமரிசனம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை மற்றும் அதற்குள்ள இடம் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. 

இதையும் படிக்கடேராடூனில் ரூ.18,000 கோடி திட்டங்கள்: டிச.4-இல் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

ADVERTISEMENT

ஆனால் காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90% க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்தபோது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை விகிக்க வேண்டும் என்பது ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படும்" என பதிவிட்டுள்ளார்.

 


 

Tags : Prashant Kishor rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT