இந்தியா

நாடாளுமன்றத்தில் கருப்புப் பட்டை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

DIN

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு கருப்புப் பட்டை, கருப்பு மாஸ்க், கருப்பு ஆடை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT