இந்தியா

'காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை' - திக்விஜய் சிங்

DIN

காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகிவிடும் என்று கூறினார். 

தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சரத் பவாா் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா என செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை’ என்று பதிலளித்தாா்.

மம்தாவின் இந்த பதில் தற்போது அரசியல் சூழ்நிலையில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:

எங்களுடன் சேர விரும்புபவர்கள் வரலாம், சேர விரும்பாதவர்கள் செல்லலாம். எங்களுடைய போர் ஆளும் பாஜகவிற்கு எதிரானது. காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.

ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராகப் காங்கிரஸ் கட்சி மட்டுமே போராடி உள்ளது. நாங்கள் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை. 

நாட்டில் அரசியல் சண்டைகளுக்கு சித்தாந்தமே முக்கிய காரணம். இந்தியாவில் இரண்டு வகையான சித்தாந்தங்கள் உள்ளன, ஒன்று காந்தி மற்றும் நேரு, மற்றொன்று 'சங்கம்' என்ற பெயரில் அரசியலில் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவது. 

காங்கிரஸ் ஒருபோதும் மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தியதில்லை. கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT