இந்தியா

தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8 குறைப்பு

1st Dec 2021 12:21 PM

ADVERTISEMENT

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8 குறைக்கப்படுவதாக தில்லி அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் மத்திய அரசு கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது.

அதைத் தொடா்ந்து 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட் வரி) குறைத்தன.

இந்நிலையில் தில்லி அரசு இன்று வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

“பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியானது 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 8 குறையும். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும்.”

Tags : Delhi Petrol Price
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT