இந்தியா

ஒமைக்ரான் அச்சம்: பிரிட்டன், நெதர்லாந்திலிருந்து வந்தவர்களுக்கு கரோனா

DIN


புது தில்லி: நெதர்லாந்து மற்றும் பிரிட்டனிலிருந்து இன்று காலை புது தில்லியில் வந்திறங்கிய நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களது மாதிரிகள் கரோனா வைரஸ் மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்குத் தொற்றியிருக்கும் கரோனா ஒமைக்ரான் வகையா என்பது உறுதி செய்யப்படும்.

நான்கு பேரும், புது தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில், ஒமைக்ரான் பாதிப்பு சந்தேகத்துடன் வரும் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்டர்டாம் மற்றும் லண்டனிலிருந்து நேற்று இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரை நான்கு விமானங்கள், இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு வந்தடைந்தன. அதிலிருந்து 1,013 பயணிகள் இந்தியாவில் தரையிறங்கினர். இவர்களில் நான்கு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேருமே இந்தியர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட பிரிட்டன், தென்னாப்ரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூ ஸிலாந்து, ஜிம்பாம்வே, சிங்கப்பூர், ஹாங் காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், அபாய நாடுகளின் பிரிவில் மத்திய அரசு சேர்த்துள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், கரோனா பரிசோதனைகளும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT