இந்தியா

ஒமைக்ரான் பரவல்: புதிய  கட்டுப்பாடுகள் விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் அமல்

1st Dec 2021 08:44 AM

ADVERTISEMENT


புதுதில்லி: ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அனைத்து விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.

உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் புதிய வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார மையம் பெயரிட்டது. இந்த உருமாறிய புதிய கரோனா தொற்று பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அறிகுறிகள் இருந்தால் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டால், உரிய வழிகாட்டுதலின்படி அவா்களுக்கு சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைக எடுக்க வேண்டும்.

ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பரிசோதனை முடிவுகளை பெறும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.  முடிவுகள் நெகட்டிவ் என வந்தாலும் சம்பந்தப்பட்டவா்கள் தங்களை 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னா் 8-ஆவது நாளில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அதிலும் நெகடிவ் என முடிவு வந்தால், அதற்கு அடுத்த 7 நாள்களுக்கு அவா்களது உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். 

அதேவேளையில், 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களது சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் அவர்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும். இந்திய புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 

இந்நிலையில்  தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரம் வந்த 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளில் இருந்து மகாராஷ்டிரம் வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்துதல் கட்டயாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Tags : New restrictions India Airports omicron virus spread omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT