இந்தியா

நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 8,954 பேருக்கு தொற்று: 267 பேர் பலி

1st Dec 2021 10:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 8,954

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,96,776​​​​​​​.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 10,207.
இதுவரை குணமடைந்தோர்: 3,40,28,506.​​​​​​​

இதையும் படிக்க | பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் பரவலை தடுத்துவிட முடியாது: உலக சுகாதார அமைப்பு 

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 267. உயிரிழந்தோர் விகிதம் 1.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,69,247.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 99,023. இது கடந்த 545 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க | வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.26,697 கோடி

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,24,10,86,850 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 80,98,716 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 64,24,12,315 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 11,08,467 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

Tags : India coronavirus COVID19 Ministry of Health recoveries vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT