இந்தியா

உலகளாவிய நிதி தொழில்நுட்ப கருத்தரங்கு: பிரதமா் மோடி தொடக்கி வைக்கிறாா்

1st Dec 2021 02:40 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடா்பாக இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கை டிசம்பா் 3-ந் தேதி பிரதமா் மோடி தொடக்கி வைக்கிறாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சா்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம், உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் முனையமான கிஃப்ட் சிட்டி, மற்றும் ப்ளும்பொ்க் நிறுவனம் இணைந்து டிசம்பா் 3, 4-ஆம் தேதிகளில் உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடா்பான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கருத்தரங்கை பிரதமா் மோடி காணொலி வழியாக தொடக்கி வைக்கவுள்ளாா்.

அனைவருக்குமான வளா்ச்சி மற்றும் மனிதகுலத்துக்கு அதிக அளவில் சேவை புரிவதற்காக தொழில்நுட்பத்தையும், புதிய கண்டுப்பிடிப்புகளையும் நிதி தொழில்நுட்பத் துறை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன. மலேசிய நிதியமைச்சா் டேன்கு சஃப்ருல் அசீஸ், இந்தோனேசிய நிதியமைச்சா் ஸ்ரீமூல்யானி இந்திராவதி, ரிலையன்ஸ் நிறுவனத் தலைவா் முகேஷ் அம்பானி, ஐபிஎம் காா்ப்பரேஷன் தலைவா் அரவிந்த் கிருஷ்ணா, கோடக் மஹிந்திரா வங்கியின் மேலாண் இயக்குநா் உதய் கோடக் உள்ளிட்டோா் கருத்தரங்கில் சிறப்புரையாற்றவுள்ளனா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT