இந்தியா

2 வயது குழந்தையை கொலை செய்த அத்தை..தில்லியில் கொடூரம்

22nd Aug 2021 12:35 PM

ADVERTISEMENT

இரண்டு வயது குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்று கொலை செய்ததாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வயது குழந்தையை அவரது அத்தை கடத்திச் சென்று கொலை செய்து பஞ்சாப் பாக் பகுதியில் உள்ள சாக்கடையில் தூக்கி எறிந்ததாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு அவரின் கணவர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட யமுனாவும் அவரது கணவர் ராஜேஷூம் கயலாவில் உள்ள ரகுபீர் நகரில் வாழ்ந்துவருகின்றனர். பிச்சைக்காரர்களான அவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "தன் தாய் தன்னை விட அக்குழந்தையின் மீது அதிக பாசத்தை காட்டியுள்ளதாக யமுனா நினைத்துள்ளார். எனவே, பொறாமையின் காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளது.

ராஜேஷின் உதவியோடு குழந்தையை கடத்திச் சென்று அதன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக என குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். குழந்தை இறந்தவிட்டதை உறுதி செய்த பின், அதன் உடலை பஞ்சாபி பாக் கண்டா நாலா பகுதியில் உள்ள சாக்கடையில் தூக்கி எறிந்துள்ளனர்" என்றார்.

ADVERTISEMENT

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள சிசிடிவின் உதவியோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இதையும் படிக்கசென்னையின் முக்கிய இடங்கள்! அன்றும்...இன்றும்...

Tags : Delhi murder
ADVERTISEMENT
ADVERTISEMENT