இந்தியா

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்துச் சேவை 

22nd Aug 2021 07:59 PM

ADVERTISEMENT

கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்துச் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் தமிழகத்திற்கான பேருந்துச் சேவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்திருந்தது. 
இந்த நிலையில் தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்துச் சேவை மீண்டும் இயக்கப்படும் என கர்நாடக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. 
வெவ்வேறு இடங்களில் இருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- வட இந்தியாவின் கல்வி மையமாக ஜம்மு உருவெடுத்துள்ளது: மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்

இதனிடையே செப்டம்பர் 1 முதல் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT