இந்தியா

வட இந்தியாவின் கல்வி மையமாக ஜம்மு உருவெடுத்துள்ளது: மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்

22nd Aug 2021 07:31 PM

ADVERTISEMENT

வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். 
ஜம்மு ஐஐஎம் (இந்திய மேலாண்மை கழகம்) 5வது ஆண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குறுகிய காலத்தில், அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பாதிப்புக்கு இடையிலும், இந்த கல்வி மையம் முத்திரை பதித்துள்ளது. 
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றுக்கு அவர் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது. 

இதையும் படிக்க- சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிப்பு

ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு முதலீட்டை காணும், குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கும், ஐஐஎம் மாணவர்களுக்கும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும். 
ஆனாலும், நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புத்தாக்க தொடக்க நிறுவன முயற்சிகள் மூலம், வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT