இந்தியா

இந்திய சகோதர, சகோதரிகளே எங்களை காப்பாற்றினர்: ஆப்கன் பெண் உருக்கம்

22nd Aug 2021 02:37 PM

ADVERTISEMENT

இந்திய சகோதர, சகோதரிகளே எங்களை காப்பாற்றினர் என ஆப்கன் பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்திய விமான படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று 168 ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளனர். தனது அனுபவங்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆப்கன் பெண், "ஆப்கானிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

எனது வீட்டை தலிபான்கள் தீயிட்டு எரித்ததையடுத்து நான், எனது மகள், பேரக் குழந்தைகள் ஆகியோர் கட்டாயப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டோம். இந்திய சகோதர சகோதரிகள்தான் எங்களை காப்பாற்றினர். எங்களுக்கு உதவி செய்த இந்திய அரசுக்கு நன்றி" என்றார்.

இந்திய விமானப் படையின் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து 107 இந்தியர்கள், 24 ஆப்கள் சீக்கியர்கள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 168 பேர் மீட்கப்பட்டு தில்லி காசியாபாத்தில் உள்ள இந்தன் விமான தளத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கசென்னையின் முக்கிய இடங்கள்! அன்றும்...இன்றும்...

ADVERTISEMENT
ADVERTISEMENT