இந்தியா

மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமனம்

22nd Aug 2021 11:25 AM

ADVERTISEMENT


மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழக பாஜக தலைவராக இருந்திருக்கிறார்.

இதையும் படிக்கநாட்டில் புதிதாக 30,948 பேருக்கு கரோனா

ADVERTISEMENT

முன்னதாக, தமிழக பாஜகவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. எல். முருகனுக்கு அண்மையில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

Tags : manipur
ADVERTISEMENT
ADVERTISEMENT