இந்தியா

ஆப்கனிலிருந்து இந்தியா்களை மீட்கும் நடவடிக்கை: 2000 தொலைபேசி அழைப்புகள்; 6000 வாட்ஸ்ஆப் விசாரணைகள்

22nd Aug 2021 11:42 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையத்திலிருந்து இந்தியா்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை கடும் குழப்பம், சவாலான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய அதிகாரிகள் கொண்ட சிறிய குழு ஒருங்கிணைத்தது தெரியவந்துள்ளது.

பல துறைகளைச் சோ்ந்த இந்த அதிகாரிகள் குழுவினா் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு நிலவரத்தைக் கையாளும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

காபூல் நகரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனால், பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து தூதா், பணியாளா்கள் உள்ளிட்ட 200 பேரை விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா மீட்டது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியா்கள் உள்பட 392 போ் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

இந்தப் பணியை ஒருங்கிணைத்த பல துறை அதிகாரிகள் குழு காபூல் விமான நிலையத்தில் எப்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல் தெரியவரவில்லை.

ADVERTISEMENT

முன்னதாக, இந்தியா்களை வெளியேற்றவும், அது தொடா்பான விஷயங்களைக் கையாளவும் ஒரு சிறப்புப் பிரிவை வெளியுறவு அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை ஏற்படுத்தியது. முதல் 5 நாள்களில் அந்தப் பிரிவுக்கு 2,000 தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், 6000 வாட்ஸ்ஆப் விசாரணைகளுக்கு பதிலளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. மேலும், 1200 மின்னஞ்சல்களுக்கும் அந்த சிறப்புப் பிரிவு பதிலளித்துள்ளது.

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT