ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கிராமவாசிகளை கவரும் வகையில் மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்களை பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில் ஜன் ஆசீர்வாத யாத்திரையை பாஜக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒடிசா சென்றுள்ள ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களோடு மக்களாக இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.
ராய்காட் மாவட்டம் பயகுத் கிராமத்தின் வழியே அஸ்வினி வைஷ்ணவ் சென்று கொண்டிருந்தபோது, பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த குழந்தைகள் அவரை நோக்கி கை அசைத்துள்ளனர். வாகனத்தை அங்கேயே நிறுத்தி, கிராம மக்களுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.
முன்னதாக, புவனேஷ்வரிலிருந்து ராய்காட் சென்ற இரவு ரயிலில் பயணம் செய்த அவர், ரயில் சேவை மற்றும் சுகாராதம் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?