இந்தியா

ஓபிசி சட்டத்திருத்த மசோதாவுக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

20th Aug 2021 09:55 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: அரசமைப்புச் சட்ட (105 -ஆவது திருத்தம்) 2021-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மாநிலங்களை அடையாளம் கண்டு குறிப்பிட அதிகாரத்தை அளிக்கிறது. 

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை (ஓபிசி) முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை(ஆகஸ்ட் 11) நிறைவேறியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதை அடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஓபிசி பிரிவினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து 127 ஆவது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்திருத்தின்படி, ஒவ்வொரு மாநிலமும் மற்றும் யூனியன் பிரதேசங்களும், அதன் சொந்த நோக்கங்களுக்காக, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகத்தினரின் பட்டியலை தயாரித்து பராமரிக்கலாம். 

முன்னதாக, மராட்டிய ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர அரசால் கொண்டுவரப்பட்ட மராத்திய சமூகத்திற்கான அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT