கோவாவில் ரஷியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
வட கோவாவின் சியோலிம் கிராமத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்த ரஷிய நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி (24) மற்றும் கேத்ரீனா திகோவா(34) ஆகிய இரு பெண்கள் அவரவர் அறைகளில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ரஷியாவில் அதிகரிக்கும் கரோனா: ஒருநாளில் 21,058 பேர் பாதிப்பு; 791 பேர் பலி
முதல் கட்ட விசாரணையில் இருவரின் உடலிலும் காயங்கள் இல்லை என்றும் இருப்பினும் இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல வெளிநாட்டு பயணிகளுக்கு பிடித்த சுற்றுலாத் தளமாக இருக்கும் கோவாவில் சமீப காலமாக ரஷியர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது.
சியோலிம் கிராமம் கடற்கரைக்கு அருகே இருப்பதால் இங்கு அதிக அளவில் ரஷியர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.