இந்தியா

பயங்கரவாதத்தின் இருப்பு நிரந்தரமல்ல: பிரதமர் மோடி

20th Aug 2021 02:22 PM

ADVERTISEMENT

பயங்கரவாத அமைப்புகளால் சிறிது காலத்திற்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அதன் இருப்பு நிரந்தரமல்ல என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்தின் மூலம் நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றும் அமைப்புகளாலும் மக்களாலும் சிறிது காலத்திற்கு மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் அவர்களின் இருப்பு நிரந்தரமானது அல்ல என்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் அமையவிருக்கும் ஸ்ரீ சிவபார்வதி கோயிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், "சோம்நாத் ஆலயம் பல முறை இடிக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் சிலைகள் பல முறை சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும் அது மீண்டெழுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிங்கஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைக்கும் அந்த ஏழு தலிபான்கள் யார்?

அழிவை நோக்கி அழைத்து செல்லும் சக்திகளும் பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களும் சில காலத்திற்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால், மானுடத்தை அவர்களால் எப்போதும் அடக்கிவிடமுடியாது. அவர்களின் இருப்பு நிரந்தரமல்ல" என்றார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மோடியின் இக்கருத்து முக்கியத்துவம் பெருகிறது.

Tags : modi Taliban
ADVERTISEMENT
ADVERTISEMENT