இந்தியா

ஆந்திரத்தில் செப். 4 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

20th Aug 2021 05:55 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளனர். இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை இரவுநேர பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்கள் உறுதி செய்யவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT