இந்தியா

ஆந்திரத்தில் சோகம்! 2 வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

14th Aug 2021 06:14 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் பெண் ஒருவர் தனது இரண்டரை வயது மகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரத்தின் அனந்தபூர் மாவட்டம் தர்மவரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு(35) என்பவரின் மனைவி மீனாட்சி (29). இவருக்கு தனுஸ்ரீ (6), பிரணீதா(2)என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 

ஸ்ரீனிவாசுலு வெள்ளிக்கிழமை காலை வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். மூத்த மகள் தனுஸ்ரீதனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றாள். மீனாட்சியும் பிரணீதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். மீனாட்சி முதலில் தன் மகளின் கையை அறுத்து, அடுத்து தன் கையை அறுத்து, பின்னர் தூக்கிட்டுக்கொண்டார். முன்னதாக, பணப்பிரச்னை தொடர்பாக இருவரும் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதியம் 12.30 மணியளவில் நீண்ட நேரம் கதவு மூடியிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பாதத்தில், மீனாட்சி உயிருடன் இருந்ததை அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், குழந்தை ப்ரணீதா இறந்து கிடந்தாள். 

ADVERTISEMENT

அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனாட்சியின் உடல்நிலை சீராக உள்ளது. 

மகளை கொலை செய்ததற்காகவும் தற்கொலை முயற்சிகாகவும் மீனாட்சி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2 வயது குழந்தையைக் கொண்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT