இந்தியா

கரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை: குடியரசுத் தலைவர் 

14th Aug 2021 07:52 PM

ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அதில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர், வீராங்னையால் நாடே பெருமை கொள்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். 

கரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை, 2ஆம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பால் கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- மீண்டும் சதமடித்தார் ஜோ ரூட்: லார்ட்ஸ் டெஸ்டில் முன்னிலையை நோக்கி இங்கிலாந்து

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு அவதால் இந்த ஆண்டு சுதந்திரதினம் முக்கியத்துவம் பெறுகிறது. 

மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களில் ககன்யான் திட்டம் முக்கியமானது. எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT