இந்தியா

பூரி ஜெகநாதர் ஆலயம் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறப்பு

12th Aug 2021 05:33 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயம் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் ஆலயம் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, கோயில் பணியாளர்களின் குடும்பத்தார் மட்டும் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது கட்டமாக பொது மக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதையும் படிக்கமாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டனரா? வெளியான பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

ADVERTISEMENT

ஆலயத்திற்கு வருபவர்கள் கோயில் நிர்வாகம் வழங்கிய அடையாள அட்டையுடன் அரசு அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் உள்ளூர்வாசிகளும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் ஆலயம், கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஏப்ரல் 24ஆம் தேதி மூடப்பட்டது. ரதா யாத்திரைக்கூட கோயில் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT