இந்தியா

எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி: களமிறங்கிய மத்திய அமைச்சர்கள்

12th Aug 2021 03:49 PM

ADVERTISEMENT

எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டதாகக் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி தந்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினரின் அச்சுறுத்தும் நடத்தையே காரணம் என மத்திய அமைச்சர்கள் இன்று (வியாழன்கிழமை) விளக்கம் அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள், பெண் எம்பிக்கள் உள்ளிட்டவர்களிடம் கடினமாக நடந்து கொள்வதற்கு வெளியாட்கள் நாடாளுமன்றத்திற்குள் அழைத்துவரப்பட்டனர் என காங்கிரஸ் உள்பட 12 எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அமைச்சர்கள் பதிலடி தந்துள்ளனர்,

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், "இந்நாட்டு மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு தீரவு காணும்படி அரசுக்கு ஒரு பொறுப்பை கொடுத்துள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் எப்படி முடக்கியுள்ளார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். இதற்கு எதிர்க்கட்சியினர் வெட்கப்பட வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT

இதையும் படிக்கமாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டனரா? வெளியான பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்தால் மிரட்டல் விடுப்போம் என்ற தோணியில் அவர்கள் நடந்து கொண்டனர். மழைக்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கான முடிவை எடுப்பதற்கு இதுவே காரணம்" என்றார்.

எதிர்க்கட்சியினர் தாக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்ததற்கு பதிலடி அளித்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் பெண் பாதுகாவலரை தாக்கியுள்ளனர். எதிர்க்கட்சயினரின் இச்செயல்களால் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் கெட்டுள்ளது" என்றார்,

ADVERTISEMENT
ADVERTISEMENT