இந்தியா

காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கு முடக்கம்

12th Aug 2021 11:08 AM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கை தாற்காலிகமாக முடக்கியுள்ளது சுட்டுரை நிறுவனம்.

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கு தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக  சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே, தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாாா் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கை சுட்டுரை நிறுவனம் தாற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. 

இதைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் தில்லியிலுள்ள சுட்டுரை இந்தியா நிறுவனத்தின் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ராகுல் காந்தியின் சுட்டுரை கணக்கு முடக்கியதற்கு பின்னர், காங்கிரஸ் கட்சியின் சுட்டுரை கணக்கு,  மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 25 பேரின் சுட்டுரை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் மக்களுக்கான குரலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பிரதமா் மோடி அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பிரதமா் மோடி மக்களை அடக்குகிறாா். ராகுல் காந்தி மக்களை வலிமைப்படுத்தி வருகிறாா். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT