இந்தியா

மாநிலங்களவையில் நிறைவேறியது ஓபிசி மசோதா 

11th Aug 2021 06:25 PM

ADVERTISEMENT

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில அரசுகளே கண்டறியும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசமைப்புச் சட்ட (127-ஆவது திருத்தம்) மசோதாவை மத்திய சமூக நீதி-அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையும் படிக்க | மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

மொத்தம் 385 உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவளித்த நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தாங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேறியது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள் ஆதரவளித்ததன் மூலம் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 

இதையும் படிக்க | 6 நாள்களில் 8 முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதன் மூலம் அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT