இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா

11th Aug 2021 09:03 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 5,560 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,69,002 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 163 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,34,364 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு

ADVERTISEMENT

இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 61,66,620 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 64,570 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 96.82 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.1 சதவிகிதமாக உள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT