இந்தியா

தலைமை செயலாளரை தாக்கியதாக வழக்கு: அரவிந்த் கேஜரிவால் விடுவிப்பு

11th Aug 2021 01:30 PM

ADVERTISEMENT

தலைமை செயலாளரை தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, தில்லியின் தலைமை செயலாளராக இருந்த அன்சு பிரகாஷை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணிஷ் திவாரி ஆகியோர் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கிலிருந்து அரவிந்த் கேஜரிவால், மணிஷ் திவாரி உள்பட 11 எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அமானத்துல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மணிஷ் திவாரி, "கேஜரிவாலுக்கு எதிரான சதி அம்பலப்பட்டுள்ளது. 

எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது பொய்யானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடரப்பட்ட முதல் நாளிலிருந்தே இக்குற்றச்சாட்டுகள் பொய்யானது எனக் கூறிவருகிறோம். பிரதமர் மோடி, பாஜகவின் கட்டளைக்கு இணங்கித்தான் தில்லி காவல்துறை சதி வேலையில் ஈடுப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க‘எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முடிக்கப்பட்டது’: ஆதீர் ரஞ்சன்

பொய்யான வழக்கு தொடரப்பட்டபோதிலும் குற்றச்சாட்டுகளை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. உண்மை இன்று வென்றுள்ளது. நீதித்துறையின் மீது வைத்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் சிறந்த முதல்வரான கேஜரிவாலிடம் பாஜகவுடம் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT