இந்தியா

முன்கூட்டியே முடிக்கப்பட்ட மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

11th Aug 2021 11:32 AM

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற செயல்பாடுகள் கடந்த 16 நாள்களாக நீட்டித்த வந்த நிலையில், மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ் விவகாரத்தை அவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர்.

கடந்த 16 நாள்களும் கூட்டம் தொடங்கியது முதலே பெகாஸஸ், வேளாண், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இதையும் படிக்க | ‘அமளியால், இரவு தூக்கம்கூட வரவில்லை’: வெங்கையா நாயுடு வேதனை

ADVERTISEMENT

நாடாளுமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அமளிக்கு நடுவே சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில், கூட்டத்தின் 17வது நாளான இன்று மக்களவை தொடங்கியவுடன், அவையை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளப்படுவதாக கூறி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT