இந்தியா

சுதந்திர தின விழா: பாதுகாப்பு வளையத்திற்குள் தில்லி

8th Aug 2021 01:28 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள செங்கோட்டையின் நுழைவாயில் முன்பு மதில் போன்ற பெரிய கப்பல் கண்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக இவை வைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், "தேசிய தலைநகரில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. எனவே, இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்கராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?

கண்டெய்னர்கள் அலங்கரிக்கப்பட்டு வர்ணம் பூசப்படவுள்ளது" என்றனர். சமீபத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சுதந்திர தினத்தன்று, தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT