இந்தியா

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாழ்த்துப்பெற்றார் பி.வி.சிந்து 

8th Aug 2021 09:22 PM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் வென்று அசத்தினார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பி.வி.சிந்து செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினாா். 

தில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ்பவனில் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
 

Tags : pv sindhu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT