இந்தியா

இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்

8th Aug 2021 05:44 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 90131 51515 வாட்ஸ்அப் எண்ணில் covid certificate என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதையும் படிக்கலாமே-  இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: இந்திய வெற்றிக்கு வில்லனாகிறதா மழை?

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 50.68 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,51,292 முகாம்களில் 50,68,10,492 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 55,91,657 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT