கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,051, திரிசூரில் 2,472, கோழிக்கோட்டில் 2,467 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,52,525ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 93 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 17,747ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 20,108 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,57,687ஆக உயர்ந்தள்ளது.
இதையும் படிக்கலாமே- மழையால் ஆட்டம் ரத்து: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்; இந்தியாவின் வெற்றி பறிபோனது!
தற்போதைய நிலவரப்படி 1,76,572 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,34,196 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 2,85,14,136 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ன. பல்வேறு மாவட்டங்களில் 4,90,858 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.