இந்தியா

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அடித்த  ஜாக்பாட்

8th Aug 2021 04:33 PM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், கோ பர்ஸ்ட், ஸ்டார் ஆர் விமானங்களில் இலவசமாக விமான சேவை மேற்கொள்ளலாம் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி வீரர்களும் தனி விளையாட்டுகளில் பதக்கம் வென்ற ஆறு பேரும், தங்களின் விமானங்களில் இலவசமாக விமான சேவை மேற்கொள்ளலாம் என கோ பர்ஸ்ட், ஸ்டார் ஆர் விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவர்களுக்கு இலவச விமான டிக்கேட்டுகள் வழங்கப்படும் என கோ பர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 13 நகரங்களுக்கிடையே விமான சேவை வழங்கிவரும் ஸ்டார் ஆர், பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்நாள் இலவச விமான சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து கோ பர்ஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், "மீராபாய் சானு (பளு தூக்குதல்), பி.வி. சிந்து (பேட்மிண்டன்), லவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை), ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், ரவி குமார் தாஹியா (மல்யுத்தம்), பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச விமான சேவை வழங்கப்படவுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT